/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
7000 சணல் பைகள் அசத்தல் குடும்பத்தலைவி
/
7000 சணல் பைகள் அசத்தல் குடும்பத்தலைவி
ADDED : ஆக 10, 2025 04:49 AM

பொ ழுது போகவில்லை என்று விளையாட்டாய் சணல் (ஜூட்) பைகள் நானாக தைத்துப் பழகினேன். இன்று தொழில்முனைவோராக ஜூட் பைகள் என்னை உயர்த்தியது என்கிறார் மதுரை விளாங்குடியை சேர்ந்த பொன் காயத்ரி.
15 ஆண்டுகளுக்கு முன் தையல் பழகியது குறித்து அவர் கூறியது: யாரிடமும் கற்று கொள்ளவில்லை. அப்போது சணல் பைகள் வந்த புதிது. ஆர்வமாக சணல் துணிகளை வாங்கி வந்து வீட்டிலேயே பைகள், பைல்கள் தைத்து பழகினேன். அக்கம்பக்கத்தினர் அந்த பைகளை விலைக்கு கேட்டனர். அந்த உற்சாகத்துடன் தாம்பூல பைகள், ஹேண்ட் பேக் தைத்து பழகினேன்.
சணல் பைகளில் நிறம் தேர்வு செய்வது தான் முதல் விஷயம். இரு நிறங்களை இணைத்து பைகள் தயாரிக்கும் போது டிசைன் பளிச்சென்று இருக்கும். தாம்பூல பைகள் பழகிய பின் வளைகாப்பு, திருமணம், கார்ப்பரேட் நிறுவனங்களின் விழாக்களுக்காக 100, 200 என்ற எண்ணிக்கையில் தாம்பூல பைகள் தைத்து கொடுத்தேன். வரவேற்பு கிடைத்ததால் வேலைக்கு சில பெண்களை அமர்த்தினேன்.
சணல் பையில் ஆரம்பித்து தற்போது ரெக்ஸின், கலம்காரி, ஜீன்ஸ் துணிகளில் ஹேண்ட்பேக், பிற பொருட்களை தயாரிக்கிறேன். குடும்பத்தலைவியாக இருந்ததாலும் எந்த பயிற்சியும் பெறவில்லை. சொந்த விருப்பத்தின் பேரில் கற்று தற்போது 8 பேருக்கு வேலை தருகிறேன்.
தாம்பூலத்திற்கான பைகள் ரூ.35 முதல் ஆர்டரின் பேரில் தயாரித்து தருகிறேன். நேரடியாக வந்து நிறங்களை தேர்வு செய்து தந்தால் தாம்பூல பை, ஹேண்ட் பேக் தயாரித்து ஒருவாரத்தில் தருவோம். சமீபத்தில் பிரதமர் மோடி வந்தபோது டி.வி.எஸ். கம்பெனிக்காக 7000 சணல் பைகள் தைத்து தந்தது பெருமையாக உள்ளது என்றார்.
இவரிடம் பேச98651 67788.