/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநகரில் ரூ.2.57 கோடி அறிவியல் பூங்கா 80 சதவீத பணிகள் நிறைவு
/
திருநகரில் ரூ.2.57 கோடி அறிவியல் பூங்கா 80 சதவீத பணிகள் நிறைவு
திருநகரில் ரூ.2.57 கோடி அறிவியல் பூங்கா 80 சதவீத பணிகள் நிறைவு
திருநகரில் ரூ.2.57 கோடி அறிவியல் பூங்கா 80 சதவீத பணிகள் நிறைவு
ADDED : செப் 29, 2025 04:29 AM

திருநகர் : திருநகரில் உள்ள அண்ணா பூங்கா ரூ. 2.57 கோடியில் அறிவியல் பூங்காவாக உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான திறப்பு விழா நடக்க உள்ளது.
திருநகர் மத்தியில் உள்ள இப்பூங்காவில் ஹாக்கி, கைப்பந்து, பூப்பந்து விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இம் மைதானங்களை நவீனப்படுத்துவதுடன், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் தொடர்புடைய வெளிப்புற சாதனங்கள் கற்றல் கருவிகளாக நிரந்தரமாக அமைக்கப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரிகள், பவுதீகம், ரசாயனம், உயிரியல், கணிதம் தொடர்புடைய கோட்பாடுகள், விதிகள், நடைமுறை பயன்பாடுகள், விளையாட்டு மூலம் கற்றல், ஆசிரியர்களின் விளக்க உரை, செயல்முறை கூட்டம் நடத்தவும், அறிவியல் வினாடி வினா, கண்காட்சிகள் நடத்த ஏதுவாக பல்நோக்கு மையம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரத்து 570 மதிப்பில் அறிவியல் பூங்காவாக மாற்றும் பணிகள் நடக்கிறது.
கவுன்சிலர் சுவேதா கூறியதாவது: திருநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. மாணவர்கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இந்த அறிவியல் பூங்கா உருவாக்கப்படுகிறது. மேற்கண்ட சாதனங்களுடன் பல்நோக்கு மையமும் அமைக்கப்படுகிறது.
இதுதவிர ஏற்கனவே பழுதடைந்திருந்த சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் அகற்றப்பட்டு நவீன சாதனங்களைப் பொருத்தும் பணியும் நடக்கிறது. எண்பது சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதிபணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா நடைபெறும் என்றார்.