/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்களில் கடத்தப்பட்ட 8.6 கி., கஞ்சா பறிமுதல்
/
ரயில்களில் கடத்தப்பட்ட 8.6 கி., கஞ்சா பறிமுதல்
ADDED : அக் 24, 2025 02:37 AM
மதுரை: மேற்கு வங்கம் புருலியாவிலிருந்து தென்காசி சென்ற ரயில், குருவாயூர் ரயில் ஆகியவற்றில் கடத்தப்பட்ட 8.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தியவர்களை ரயில்வே போலீசார் தேடுகின்றனர்.
ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதற்காக திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் தலைமையில் அக்., 19 ல் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்கு வங்கம் புருலியாவிலிருந்து தென்காசி சென்ற வாராந்திர ரயில் முன்பதிவில்லாத பெட்டிகள் சோதனையிடப்பட்டதில் கேட்பாரற்று கிடந்த பையில் 4 பார்சல்களில் 7.750 கிலோ கஞ்சா இருந்தது. அதே ரயிலில் பயணித்த பீகார் ஸ்ரீசான்ராமிடமிருந்து 40, 5.600 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.
அக்., 22ல் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் குருவாயூர் ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியை சோதனையிட்டு 2 பார்சல்களில் 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தியவர்களை போலீசார் தேடுகின்றனர்.

