ADDED : ஆக 12, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக.13-
மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு நேற்று ஒரு அலைபேசி தகவல் வந்தது.
காதக்கிணறு துளசிதாஸ்நகர் 6 வதுதெருவில் ஒருகுழந்தையின் தலை ஒரு ஈயப்பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதென வந்த தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்தனர். அங்கு ஒரு வயதுகுழந்தையின் தலையில் மாட்டி இருந்த பாத்திரத்தை கருவியால் பத்திரமாக வெட்டி அகற்றினர். அதன்பின்னரே பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
