/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மந்தையில் எரியாத உயர்கோபுர விளக்கு
/
மந்தையில் எரியாத உயர்கோபுர விளக்கு
ADDED : செப் 16, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: அலங்காநல்லுார் ஒன்றியம் சின்னஇலந்தைக்குளம் ஊராட்சியில் கிராம மந்தையில் அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்கு 6 மாதங்களாக எரியாமல் உள்ளது. கடந்த 2021ல் பொதுநிதி ரூ.5 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மந்தையை சுற்றி கோயில், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இவ்வழியாக கடைகளுக்கு இரவிலும் பெண்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் விளக்கு எரியாததால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்த மின் விளக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.