/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.புதுப்பட்டியில் கிணறு துார்வார வலியுறுத்தல்
/
அ.புதுப்பட்டியில் கிணறு துார்வார வலியுறுத்தல்
ADDED : நவ 27, 2024 05:09 AM
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி அ.புதுப்பட்டியில் பயன்பாட்டில் உள்ள பழமையான கிணறை துார்வாரி பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இங்குள்ள பாலமரத்தம்மன் கோயில் தெருவில் 2 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதனருகே உள்ள மிகப் பழமையான கிணறு, தண்ணீர் தொட்டி மூலம் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இக்கிணற்றை மூடியுள்ள சிமென்ட் சிலாப்புகள் உடைந்தும், அரச மரங்கள் வளர்ந்தும் உள்ளன.
திறந்தவெளி கிணறால் சிறுவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. கிணற்றில் வசிக்கும் பறவைகள், புறாக்களின் எச்சம், இறகுகளால் தண்ணீர் மாசடைகிறது. இதன் மூலம் விநியோகிக்கப்படும் நீரில் உப்புத் தன்மை அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். பழமையான இத்தொட்டியை பராமரிக்க, கிணறை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தினர்.