UPDATED : அக் 21, 2026 12:19 AM
ADDED : அக் 21, 2026 12:16 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை –தேனி வழித்தடத்தில் உசிலம்பட்டி, வடபழஞ்சி ஸ்டேஷன்களுக்கு இடையே அக்.18ல் போடி –தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் எறியப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் உசிலம்பட்டி துரைசாமிபுரத்தை சேர்ந்த சச்சின் 26, என்பவரை விசாரித்ததில் அவர் கல் எறிந்தது தெரிந்தது. ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.
