
மீண்டும் ஆக்கிரமிப்பு
மதுரை பீபிகுளம் சந்திப்பில் பாலத்தை அகலப்படுத்தியபோது கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சில நாட்களாக அந்த கடைகளின் முன் மீண்டும் 10 அடி வரை ரோட்டில் சுவர் எழுப்பி கூரை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
- எம்.விஸ்வநாதன், முல்லைநகர், மதுரை.
மழைநீர் தேக்கம்
மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில் தெருவில் பல வாரங்களாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து ரோட்டில் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே போக்குவரத்து தடைபட்டுள்ளது. கொசு உற்பத்தி பெருகி நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணேஷ், தாசில்தார் நகர்.
வேண்டும் வேகத்தடை
மதுரை அனுப்பானடியில் காலை, மாலை 'பீக் ஹவர்'களில் டூவீலர், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் ரோட்டை கடக்க வேண்டியுள்ளது. உயிரிழப்பு ஏற்படும் முன் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமணரிஷி, அனுப்பானடி
குப்பை வண்டி எங்கே
மதுரை சர்வேயர் காலனி சுபாஷினி நகரில் குப்பை வண்டி வாரம் ஒருநாள் கூட வருவதில்லை. இதனால் தெருவெங்கும் குப்பை சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோபால்சாமி, சர்வேயர் காலனி.
கழிவுநீர் வெளியேற்றம்
மதுரை ராஜாமில் ரோடு சேனையர் காலனி குடியிருப்பு பகுதியில் ஒரு வாரமாக கழிவுநீர் வெளியேறுகிறது. பொதுமக்கள், குழந்தைகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரோகிணி, ராஜா மில் ரோடு.
தகுதியில்லாத ரோடுகள்
மதுரை சம்மட்டிபுரம் 3வது தெருவில் குடிநீர் இணைப்புக்காக ரோடுகளைத் தோண்டி சரிவர மூடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அவசரத்திற்கு ஆட்டோ கூட வரவழியில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கலைச்செல்வி, சம்மட்டிபுரம்.
வீட்டிற்குள் கழிவுநீர்
மதுரை புதுார் வண்டிப்பாதை ரோடு பழனிசாமி நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதியில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. சுகாதார சீர்கேடால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுபா, ரிசர்வ் லைன்.