
ஜல்லி ரோடு
காதக்கிணறு மங்களக்குடி பகுதியில் பல நாட்களாக ரோடு அமைக்க ஜல்லி கொட்டபட்டதோடு சரி. பணி நடக்கவில்லை. இதனால் இப்பகுதியில் நடந்துகூட செல்ல முடியவில்லை.
-வெங்கட்பிரபு, மங்களக்குடி
தெருக்களில் கழிவுநீர்
விளாங்குடி மீனாட்சிநகர் 5வது தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைத்து வெளியேறுகிறது. இதனால் தெரு முழுவதும் கழிவுநீர் செல்கிறது. நடவடிக்கை தேவை.
- கணேஷ், விளாங்குடி
நாய்கள் தொல்லை
விராட்டிபத்து பென்னர் காலனி ஆறுமுகம் பிள்ளை நகர் 7வது தெருவில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. டூவீலரில் செல்ல முடியவில்லை. நாய் துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- ராஜேஷ், விராட்டிபத்து
ரோட்டில் குப்பை
மதுரை பழையகுயவர்பாளையம் ரோட்டில் பள்ளி அருகே இருபுறமும் சாக்கடை குப்பையை குவித்து வைத்துள்ளனர். குறுகிய ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
- மணிகண்டன், குயவர் பாளையம் ரோடு
கழிவுநீர் சங்கமம்
மதுரை நெல்பேட்டை வைகை கரை ரோட்டில்பாதாளசாக்கடை கழிவுநீரும், மீன்கடைகளின் கழிவும் சங்கமமாகிறது. ரோட்டில் செல்ல முடியவில்லை.
- ஸ்ரீதர் பாபு, முனிச்சாலை

