ADDED : மார் 14, 2024 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வடிகால் வாரியத்தில், குடிநீர் வழங்கும் பணியில் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கு உயர்நீதி மன்ற இடைக்கால தீர்ப்பின்படி வங்கி மூலம் சம்பளம் வழங்குவது, ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை குறைக்காமலும், குறைந்தபட்ச ஊதியம் வழங்கவும், ஊதியத்திற்கேற்ற இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்., குரூப் இன்சூரன்ஸ், ஒருமாத ஊதியம் போனஸாக வழங்குதல் போன்றவற்றை வலியுறுத்தி, மதுரை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். சி.ஐ.டி.யூ., மதுரை மாவட்ட தலைவர் தெய்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அழகுமலை, சோனைகருப்பன், சிவபெருமாள், ஆஞ்சி, பஞ்சாட்சரம் உட்பட பலர் பேசினர்.

