/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பால் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுக்க ஆவின் அதிகாரிகள் களம் இறங்கிட்டாங்க! ஊக்கத்தொகை முழுசா போய் சேர்ந்ததா என விசாரிக்க ஏற்பாடு

ADDED : அக் 19, 2025 10:27 PM
மதுரை: மதுரையில் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு இந்தாண்டு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை முழுவதுமாக சென்றடையவில்லை என புகார் எழுந்ததால் அதுகுறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மதுரை உட்பட லாபத்தில் இயங்கும் ஆவின் ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்கத் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டது.
இதன்படி மதுரையில் 632 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சேர்ந்த 9766 உற்பத்தியாளர்களுக்கு ரூ. 5.63 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பப்பட்டது. இதற்கான பணம் சங்கங்களின் தலைவர்கள் வங்கிக் கணக்கில் ஆவின் செலுத்திவிட்டது.
நேர்மையான பெரும்பாலான சங்கங்கள் உறுப்பினர்களுக்கு உரிய தொகையை வழங்கிய நிலையில் சில சங்கங்கள் உறுப்பினர்களுக்கு கடன் பெற்றுள்ளதை சரிக்கட்ட பல காரணங்களை கூறி ஸ்வீட், காரம் மட்டும் கொடுத்துவிட்டு ஊக்கத் தொகையை சரிக்கட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இப்பிரச்னை வெளியே தெரியவிடாமல் களத்தில் உள்ள சில அதிகாரிகளும் துணைபோயுள்ளனர். இத்தகவல் மதுரை ஆவின் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தற்போது சங்கங்களின் தனி அலுவலராக ஆவின் கள அலுவலர்களே உள்ளனர். அவர்கள் கண்காணிப்பில் இந்த ஊக்கத் தொகை அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் கிடைக்க உரிய வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஊக்கத் தொகை கிடைக்காத உற்பத்தியாளர்கள் மதுரை ஆவின் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.
இதுபோல் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியது, உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொண்டதற்கான அவர்கள் கையெழுத்து பெற்ற ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். ஆவின் தனி அதிகாரியான கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று ஊக்கத் தொகையில் முறைகேடு நடந்திருந்தால் உரிய விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.