/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை - கான்பூர் ரயிலில் கூடுதல் 'ஏசி' பெட்டிகள்
/
மதுரை - கான்பூர் ரயிலில் கூடுதல் 'ஏசி' பெட்டிகள்
ADDED : நவ 13, 2024 06:27 AM
மதுரை : தீபாவளி, சத் பண்டிகைகளை முன்னிட்டு மதுரை - கான்பூர் சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் கடந்த மாதம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
கான்பூர் சென்ட்ரலில் இருந்து புதன் தோறும் மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01927) வெள்ளி காலை 9:30 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வெள்ளி தோறும் இரவு 11:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01928) ஞாயிறு இரவு 10:20 மணிக்கு கான்பூர் செல்லும்.
திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம்,ஜோலார்பேட்டை, காட்பாடி, விஜய வாடா, நாக்பூர் வழியாக இவ்விரு ரயில்களும், ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்பட்டன.
ரயில்களில் 3 பொதுப் பெட்டிகள் குறைக்கப்பட்டு 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இது இன்று முதல் ஜன., 1 வரை இயக்கப்படும் சிறப்பு ரயிலிலும் (01927), நவ., 15 முதல் ஜன., 3 வரை இயக்கப்படும் சிறப்பு ரயிலிலும் (01928) அமலுக்கு வருவதாக வடமத்திய ரயில்வே அறிவித்துள்ளது.