/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூடுதல் 'பார்க்கிங்' கட்டணம்: தனியார் பணியாளர் பணிநீக்கம்
/
கூடுதல் 'பார்க்கிங்' கட்டணம்: தனியார் பணியாளர் பணிநீக்கம்
கூடுதல் 'பார்க்கிங்' கட்டணம்: தனியார் பணியாளர் பணிநீக்கம்
கூடுதல் 'பார்க்கிங்' கட்டணம்: தனியார் பணியாளர் பணிநீக்கம்
ADDED : ஜன 30, 2024 10:42 PM
மதுரை: மதுரை விமான நிலையத்தில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த ஒப்பந்த பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட,ஏற்றிச் செல்ல கார் உள்ளிட்ட வாகனங்கள் வருகின்றன.எத்தனை மணிக்கு வருகிறது என்பதை பதிவு செய்து உள்ளே செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. பின்னர் வெளியேறும்போது எவ்வளவு நேரம் கார் நின்றதோ அதற்கான கட்டணத்தை வசூலிப்பது வழக்கம்.
'பயணிகளை இறக்கிவிட்டு 10 நிமிடத்திற்குள் வெளியேறி விட்டால் கட்டணம் கிடையாது. அதற்கு மேல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றால், 2 மடங்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என டிரைவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து செய்தி வெளியானது.
எம்.பி.,க்கள் மாணிக்கம்தாகூர், வெங்கடேசன் விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் கவனத்திற்கு கொண்டு சென்றனர். முதுநிலை வர்த்தக மேலாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் பணியாளர் கூடுதல் கட்டணம் கேட்டது உறுதியானது. இதைதொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.