/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆதிதிராவிடர் நலத்துறை தனித்தாசில்தார்களால் தாக்குப்பிடிக்க முடியலை: மூன்றாண்டுகளில் 14 பேர் இடமாறிச் சென்றனர்

ADDED : பிப் 10, 2024 05:12 AM

மதுரை: மதுரை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 3 ஆண்டுகளில் 14 தாசில்தார்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.
இத்துறையில் மாவட்ட அலுவலக நிர்வாகத்தின் கீழ், நிலம் எடுப்பு பிரிவுக்கென தாசில்தார்கள் உள்ளனர். இப்பிரிவு ஆதிதிராவிடர் நலத்துறையில் செயல்படும் பள்ளி, கல்லுாரி, விடுதிகள் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தி அரசுக்கு வழங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் இப்பிரிவில் அலகு 1, அலகு 2 மற்றும் உசிலம்பட்டி என்ற பிரிவுகள் உள்ளன. இவற்றில் அலகு 1, 2 பிரிவுகளின் அதிகாரிகளான தனித்தாசில்தார்கள் கடந்த 3 ஆண்டுகளில் 14 பேர் பொறுப்பேற்று உடனுக்குடன் இடம்மாறிச் சென்றுள்ளனர். 3 மாதங்களுக்கு 2 அல்லது 3 பேர் இடமாறியுள்ளனர். ஒரு பணியிடத்தில் அமரும் அதிகாரி அதன் தன்மையை அறிய சிலமாதங்கள் பிடிக்கும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இடம் மாறும் அதிகாரிகளால் அத்துறைக்கும், மக்களுக்கும் எந்த பயனும் கிடைப்பதில்லை.
இதற்கான காரணம் என்னவென்று ஆராய வேண்டியது அரசின் கடமை. இத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளது. காரணம், நிலம் எடுப்பு தொடர்பான பணிகள் என்பதால் ஏகப்பட்ட வழக்குகள் வருகின்றன. அவை குறித்த கோப்புகள் ஏற்கனவே முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே போதிய விவரங்கள் இன்றி வழக்குகளை முடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். நீதிமன்றத்திலும், உயரதிகாரிகளிடமும் கண்டனம் எழுவதை தவிர்க்க முடியாமல் தவிக்கின்றனர். இக்காரணத்தால் வழக்கமான பணிகளை செய்ய முடிவதில்லை. எனவே இடமாறுதலை கேட்டுப் பெறுகின்றனர்.
சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் - வருவாய்த்துறையினர் இடையேயான பிரச்னைக்கும் இதுபோன்ற சூழலே காரணமாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை ஏற்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. அதேசமயம் குழு அமைத்து காரணத்தை களைந்து, பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.