/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் விவசாய தொழிலாளர் மகிழ்ச்சி
/
மழையால் விவசாய தொழிலாளர் மகிழ்ச்சி
ADDED : நவ 03, 2025 04:04 AM
பேரையூர்: மழை காரணமாக விவசாய தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைத்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேரையூர் வட்டார கிராமங்களில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளது. இவற்றில் முக்கால் பங்கு மானாவாரி நிலங்கள். மழை பெய்தால் மட்டுமே இந்நிலங்களில் சாகுபடி பணிகள் நடக்கும்.
இதனை நம்பியே இப்பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் இத்தொழிலாளர்களில் பலர் மாற்று வேலைக்கு சென்று விட்டனர். எஞ்சியுள்ளோர் கிடைத்த விவசாய பணிகளை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் 2 ஆண்டுகளாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பங்கு பெற்றனர்.
இந்தாண்டு ஓரளவு மழை பெய்ததால் இத்தொழிலாளர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. மானாவாரி நிலங்களில் ஒரே நேரத்தில் வேளாண் பணிகள் தொடங்கியது இதற்கு காரணம். விதைப்பு பணிகள் முடிந்து மக்காச்சோளம், பருத்தி, சோளக்காடுகளில் தற்போது களை எடுக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. உரிய காலத்தில் களை எடுத்தால் தான் பயிர் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும். எனவே கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வேலை கிடைத்து வருவது அத்தொழிலாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

