நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் விழாவையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடந்தன.
சர்ச் அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் காலை 7:00 மணி முதல் இரவு வரை கல்லறை திருவிழா நடந்தது. இந்த வழிபாட்டை ஒட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்த முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்தனர். மெழுகுவர்த்தி ஏற்றியும், சாம்பிராணி துாபம் போட்டு இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை வைத்து வழிபட்டனர்.
இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதல்களுக்கு ஆலய அதிபர் ரமேஷ் அடிகளார் அர்ச்சித்து வழிபாடு செய்தார். திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

