/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சேதமடையும் கால்வாயால் பாதிப்படையும் விவசாயம்
/
சேதமடையும் கால்வாயால் பாதிப்படையும் விவசாயம்
ADDED : நவ 03, 2025 04:23 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே பெரியாறு பாசன கால்வாயில் மீண்டும், மீண்டும் விழும் ஓட்டையால் தண்ணீர் வெளியேறி விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெரிய ஊர்சேரி கண்மாய் நீர் சைமன் பாலம் ஓடை பெரியாறு பாசன கால்வாய் கான்கிரீட் தளத்திற்கு கீழாக வெளியேறும் வகையில் உள்ளது.
இப்பகுதிக்கு கண்மாய் பாசனம் மட்டுமே உள்ள நிலையில் கான்கிரீட் தளத்தில் விழுந்த ஓட்டையில் பாசன நீர் அதிகளவில் வெளியேறி விவசாயத்தை பாதிக்கிறது
விவசாயி பழனிகுமார் கூறியதாவது: கால்வாயில் விழுந்த ஓட்டையால் இப்பகுதி விவசாயம் 10 ஆண்டுகளாக பாதித்தது. கடந்தாண்டு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால் ஓட்டையை சீரமைத்தனர்.
நீர்வளத் துறையின் தரமற்ற பணியால் தண்ணீர் வந்த முதல் நாளே மீண்டும் ஓட்டை விழுந்தது. பின் மீண்டும் சரிசெய்த நிலையில் தற்போது மீண்டும் விழுந்த ஓட்டையில் வெளியேறும் தண்ணீர், விவசாய நிலங்களை சூழ்ந்து வீணாகிறது. வாழை, தேக்கு, தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கின்றன.
பலமுறை புகார் மனு அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இப்பகுதியில் வரைபடத்தில் உள்ளபடி அளவீடு செய்து மரங்குழி ஓடை வரை கான்கிரீட் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்றார்.

