/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லி கொட்டி நாளாச்சு தார் ரோடு என்னாச்சு
/
ஜல்லி கொட்டி நாளாச்சு தார் ரோடு என்னாச்சு
ADDED : நவ 03, 2025 04:26 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் கீழசின்னணம்பட்டி ரோட்டில் ஜல்லிக் கற்கள் கொட்டி 2 மாதங்களுக்கு மேலாகியும் சாலை அமைக்காததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
பாலமேடு மெயின் ரோட்டில் இருந்து ஒன்றரை கி.மீ., ரோடு 7 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. பின் பராமரிக்காமல் சேதமடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக பயணிக்க முடியாத அளவில் வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தி வந்தது.
இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லிக் கற்கள் கொட்டி பரப்பினர். இவ்வழியாக நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
முதியோர் நடந்து செல்லும் போது பாதங்களை கற்கள் பதம் பார்க்கின்றன. டூவீலரில் செல்வோர் தவறி விழுந்து காயமடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து துவக்கி முடிக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.

