ADDED : மே 17, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில்பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.இங்கு கிராம கழிவு நீர் குழாய், பாசன கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் வரும் நீர் கருப்பு நிறமாக மாறி உள்ளது.
மேலும் ஏராளமான பிளாஸ்டிக் குப்பை நிரம்பியுள்ளன. தேவையற்ற களைச்செடிகள் முளைத்துள்ளன.இக்கால்வாய் நீர் சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு செல்கிறது. இதனால் கண்மாயும் பாதிக்கும் நிலை ஏற்படும். இக்கண்மாயை நம்பி பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.