/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் குடிநீரில் சாக்கடை வயிற்றுப்போக்கு பாதிப்பு அ.தி.மு.க., குற்றச்சாட்டு
/
மழையால் குடிநீரில் சாக்கடை வயிற்றுப்போக்கு பாதிப்பு அ.தி.மு.க., குற்றச்சாட்டு
மழையால் குடிநீரில் சாக்கடை வயிற்றுப்போக்கு பாதிப்பு அ.தி.மு.க., குற்றச்சாட்டு
மழையால் குடிநீரில் சாக்கடை வயிற்றுப்போக்கு பாதிப்பு அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : நவ 02, 2024 06:00 AM
மதுரை, நவ.2-
''மதுரையில் தொடர் மழையால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: குடிநீர் குழாய்கள் சில இடங்களில் உடைந்து அதில் சாக்கடை நீர் கலந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக சாக்கடை கலந்த நீரை மக்கள் பயன்படுத்துவதால் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது. தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மயக்கம் வரும். அதை தொடர்ந்து சிறுநீரக பாதிப்பு கூட ஏற்படும். வயிற்றுப்போக்கால் மருத்துவமனைகளில் அதிகளவில் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
ஏற்கனவே பொதுச்செயலாளர் பழனிசாமி, 'மழை நீரால் மதுரை மிக பாதிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்புதான் மதுரையில் முதல்வர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, அதில் செல்லுார் கண்மாயில் இருந்து மழை நீரை வெளியேற்ற ரூ.11.9 கோடி அளவில் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் ஆய்வு செய்த பின்பு கூட சம்பந்தப்பட்ட பகுதியில் சுகாதார துறை, மாநகராட்சி மருத்துவ முகாம்கள் நடத்தி இருந்தால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. முதல்வர் ஆய்வு கூட்டம் கண்துடைப்பாக இல்லாமல், மக்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றார்.