திருப்பரங்குன்றம்: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி திருப்பரங்குன்றம் வருகையை முன்னிட்டு மதுரை கிழக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன், இலக்கிய அணி அமைப்பாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் செல்வகுமார், பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், ''பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். இதனால் தி.மு.க.,விற்கு காய்ச்சல் வந்துவிட்டது. 2026ல் தமிழக மக்கள் தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவது உறுதி'' என்றார்.
மேலுார்: அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்தது. ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

