/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அ.தி.மு.க., கோரிக்கை
/
பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அ.தி.மு.க., கோரிக்கை
பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அ.தி.மு.க., கோரிக்கை
பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அ.தி.மு.க., கோரிக்கை
ADDED : அக் 25, 2025 05:53 AM

மதுரை: ''சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்'' என கட்சி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா 2014ம் ஆண்டு ரூ.3.7 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அது மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தேவர் ஜெயந்தி சமயத்தில் கட்சி பொருளாளரும், தேவர் நினைவிட பொறுப்பாளரும் நேரில் வந்து வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெற்று, சிலைக்கு அணிவிப்பர். விழா முடிந்தபின் மீண்டும் வங்கியிடம் ஒப்படைப்பது வழக்கம்.
இதன்படி நேற்று பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தங்ககவசத்தை பெற்று அதை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ். சரவணன், மாணிக்கம், தமிழரசன், மலேசியா பாண்டியன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ''சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்'' என்றார்.
கமுதி தங்க கவசம் போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டுவரப் பட்டது. சிலைக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார், நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் முன்னிலையில் தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.
உதயகுமார் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றார்.

