/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வானோருக்கு மதுரையில் நியமன ஆணை வழங்கும் விழா
/
மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வானோருக்கு மதுரையில் நியமன ஆணை வழங்கும் விழா
மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வானோருக்கு மதுரையில் நியமன ஆணை வழங்கும் விழா
மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வானோருக்கு மதுரையில் நியமன ஆணை வழங்கும் விழா
ADDED : அக் 25, 2025 05:54 AM

மதுரை: மதுரையில் தபால் துறை சார்பில், மத்திய அரசுப் பணியிடங்களில் தேர்வானோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் 'ரோஜ்கர் மேளா' நிகழ்ச்சி நடந்தது.
யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே, வங்கித் தேர்வுகள் மூலம் மத்திய அரசுப் பணியிடங்களுக்குதேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரம் பேருக்கு, நேற்று நாடு முழுவதும் 40 இடங்களில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தில் 334 பேருக்கு வழங்கப்பட்டது. மதுரையில், தபால் துறையில் 36, ரயில்வேயில் 15, புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கல்லுாரியில் (என்.ஐ.டி.,) 5, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.ஆர்.பி.எப்.,ல் 2 என 60 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்மண்டல தபால் துறை இயக்குநர் ஆறுமுகம் வரவேற்றார். தமிழக முதன்மை தபால் துறை தலைவர் மரியம்மா தாமஸ் பணி நியமன ஆணை வழங்கி பேசியதாவது:
மத்திய அரசு வேலைவாய்ப்பு மூலம் இளையோர்களுக்கு அதிகாரமளிப்பது மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழக அஞ்சல் வட்டத்தில் இதுவரை 3400 பேர் நியமனம் பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களின் திறமைகளைதிறம்பட பயன்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசு வழங்குகிறது. தனிப்பட்ட நன்மைக்காக அல்லாமல் நாட்டின் நன்மைக்காக பணியாற்ற வேண்டும் என்பதை ஒவ்வொருஅரசு ஊழியரும் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக காணொலி வாயிலாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகவுரை நிகழ்த்தினார். பிரதமர் நரேந்திர மோடி ,பணி நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறி அறிவுரை வழங்கினார்.
மதுரை ரயில்வேகோட்ட பணியாளர் நல அலுவலர் சங்கரன், புதுச்சேரி என்.ஐ.டி., துணை பதிவாளர் தேபி பிரசாத் பட்டநாயக், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமண்டல உதவிப் பொது மேலாளர் ரவீந்திரன், இந்தோ திபெத் எல்லை காவல்படையின் 45வது பட்டாலியன் துணை கமாண்டன்ட் நரேஷ் சந்தர்பால் சிங் பங்கேற்றனர்.

