/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறமையில்லாத தி.மு.க., ஆட்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
திறமையில்லாத தி.மு.க., ஆட்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
திறமையில்லாத தி.மு.க., ஆட்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
திறமையில்லாத தி.மு.க., ஆட்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : அக் 05, 2025 03:03 AM
ஒத்தக்கடை : மதுரை கிழக்கு சட்டசபை தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் ஒத்தக்கடையில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சேனாதிபதி தலைமை வகித்தார். கார்சேரிகணேசன் முன்னிலை வகித்தார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசியதாவது: அ.தி.மு.க., வையும், சின்னத்தையும், கொடியையும் சிலர் முடக்க நி னைத்தபோது நீதிமன்றம் மூலம் மீட்டெடுத்தவர் பொதுச்செயலாளர் பழனிசாமி. அ.தி.மு.க., வை உடைக்க நினைத்தவர்கள் கரை வேட்டி கட்ட முடியாத நிலையை பொதுச் செயலாளர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. திறமை இல்லாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது. ஸ்டாலின் துணை முதல்வராக வந்தார். அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்தது. தற்போது உதயநிதி துணை முதல்வராகியுள்ளார். அடுத்து அ.தி.மு.க., நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என்றார்.
பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் பாலச்சந்தர், துரைப்பாண்டி, ஜெயக்கொடி, அம்பலம், சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங் கேற்றனர்.