/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் ஐப்பசிபூரம்
/
திருப்பரங்குன்றத்தில் ஐப்பசிபூரம்
ADDED : நவ 15, 2025 05:01 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் தெய்வானை மட்டும் எழுந்தருளினார்.
அம்பாள் முன்பு வெள்ளிக் குடத்தில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. அரிசி, வெல்லம், நெல், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்த்து, அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.
படிகளில் வைத்திருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன்பு 3 முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து, புனித நீர் அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது. பின்னர் ரத வீதிகளில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
* எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். லலிதா பரமேஸ்வரி, பால திரிபுர சுந்தரி அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்பட திரவிய அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

