/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அச்சத்தில் அம்மச்சியாபுரம் தொகுப்பு வீடுகள் சேதம்
/
அச்சத்தில் அம்மச்சியாபுரம் தொகுப்பு வீடுகள் சேதம்
ADDED : ஆக 21, 2024 05:31 AM

சோழவந்தான் : வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம், பொம்மன்பட்டியில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உயிர் பலி வாங்கும் அபாயத்தில் உள்ளது.
இந்த வீடுகள் இதுவரை பராமரிக்கப்படாததால் பலவீனமடைந்து, மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன.
சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் அச்சுறுத்துகின்றன. இரு நாட்களுக்கு முன் கனமழைக்கு அம்மாபிள்ளையின் 75, வீட்டின் மேற்கூரை இடிந்தது.
20க்கும் மேற்பட்ட வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளது.
பாண்டிச்செல்வி: இங்குள்ள தொகுப்பு வீடுகள் அனைத்துமே மோசமான நிலையில் உள்ளன. சிலர் மட்டுமே தொகுப்பு வீடுகளை தங்களுக்கு ஏற்ப கட்டிக் கொண்டனர். நான் உட்பட மற்றவர்களுக்கு வீடு கட்டவோ, சீரமைக்கவோ நிதி வசதி இல்லை. உயிர் பயத்துடன் வாழ்கிறோம்.
செல்வம்: அரசால் வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்டித் தருவதாக கூறினர், ஆனால் தரவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் மண் சுவரில் வீடு கட்டி வசித்து வருகிறேன். சமீபத்திய மழைக்கு சுவர் உள்பக்கமாக சாய்ந்துள்ளது. அதிகாரிகள் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

