/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சி போலீஸ் வந்ததால் தப்பியது
/
3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சி போலீஸ் வந்ததால் தப்பியது
3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சி போலீஸ் வந்ததால் தப்பியது
3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சி போலீஸ் வந்ததால் தப்பியது
ADDED : ஜன 09, 2024 06:16 AM
மதுரை : மதுரையில் நகைக்கடைகளுக்கு கொண்டு வந்த 3 கிலோ தங்கத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியைச் சேர்ந்தவர் லட்சுமணன் 34. கீழக்கரையைச் சேர்ந்தவர் சீனி முகமது அலி 43. மொத்த நகை விற்பனையாளர்களிடம் வேலை செய்கின்றனர்.
ஆர்டர் கொடுக்கும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு சென்னை சென்று நகைகளை வாங்கி கமிஷன் அடிப்படையில் வழங்கி வந்தனர்.
ஜன.,6 இருவரும் சென்னையில் 3 கிலோ தங்க நகைகளை வாங்கிக்கொண்டு பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரை வந்தனர்.
பின்னர் ஆட்டோவில் ஜான்சிராணி பூங்காவில் இறங்கி, அதிகாலை 5:50 மணிக்கு நகைக்கடை பஜார் வழியாக நடந்து வந்தனர். அப்போது டூவீலரில் வந்த இருவர், நகைப் பையை பறித்தனர்.
லட்சுமணனும், சீனி முகமது அலியும் அலறியவாறே பையை விடாமல் போராடினர். சத்தம் கேட்டு அருகில் இருந்த எஸ்.ஐ., சஞ்சீவ்மகேஷ் தலைமையிலான போலீசார் ஓடி வந்தனர்.
அவர்களை பார்த்ததும் இருவரும் தப்பிச்சென்றனர். நகைப்பை தப்பியது. டூவீலர் பதிவெண் அடிப்படையில் இருவரிடம் தெற்குவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.