ADDED : அக் 23, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:
விளாச்சேரி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோயிலில் மூலவர்கள் காசி விஸ்வநாதர், மருதீஸ்வரருக்கு தனித்தனி சன்னதி உள்ளது. நாளை(அக்.25) மதியம் மூலவர்களுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிவாச்சாரியார்கள் அன்னாபிஷேகம் நடத்துகின்றனர். மருதீஸ்வரருக்கு பக்தர்கள் அன்னம் அலங்காரம் செய்யலாம். கோயிலில் அன்னம் தயாரித்து வழங்கப்படும். அதை தங்கள் கைகளாலேயே மருதீஸ்வரருக்கு அலங்காரம் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் 97888 54854ல் தொடர்பு கொள்ளலாம்.
