ADDED : டிச 01, 2024 04:19 AM

மதுரை : மதுரையில் தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாவட்ட கிளை பேரவைக் கூட்டம் தலைவர் மூக்கையா தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ராஜா மதிவாணன் வரவேற்றார். செயலாளர் வேலாயுதம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கண்ணதேவ ஜெகதீஷ் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மகபூப்பாஷா, சிவகங்கை தலைவர் வீரபாண்டியன் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமாநுஜம், குருசாமி, ரஷீத்அலி, அழகுமீனாள் தீர்மானங்கள் குறித்து பேசினர்.
தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மாதாந்திர பிடித்தம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவில் தகுதியுள்ள தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தபின் குடும்பநல நிதியாக ரூ.2.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1000 மாக உயர்த்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
75 வயதை கடந்த 21 உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.ஓய்வுபெற்றதுணை கலெக்டர் மோகனா நன்றி கூறினார்.

