/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கார் மோதி 4 பேர் பலியான குஞ்சாம்பட்டியில் மீண்டும் விபத்து
/
கார் மோதி 4 பேர் பலியான குஞ்சாம்பட்டியில் மீண்டும் விபத்து
கார் மோதி 4 பேர் பலியான குஞ்சாம்பட்டியில் மீண்டும் விபத்து
கார் மோதி 4 பேர் பலியான குஞ்சாம்பட்டியில் மீண்டும் விபத்து
ADDED : மே 26, 2025 02:22 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி-தேனி ரோட்டில் குஞ்சாம்பட்டி விலக்கில் நேற்று முன்தினம் இரவு ரோட்டைக் கடக்க முயன்ற 7 பேர் மீது கார் மோதியதில் 4 பேர் பலியாயினர்.
அதே இடத்தில் நேற்று இரவு 8:30 மணிக்கு குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த செல்வாக்கியம் 60, ரோட்டில் நடந்து வந்த போது உசிலம்பட்டி நோக்கி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார்.
அவரை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மின்கம்பி அருகே சென்றதால் வெட்டப்பட்டிருந்த மரக்கிளைகளை ரோட்டில் போட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகரன், போலீசார் சமாதானம் செய்தனர்.
மதுரை -தேனி ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.