UPDATED : நவ 21, 2026 07:14 PM
ADDED : நவ 21, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு மருந்தியல் கல்லுாரி, அல்ட்ரா மருந்தியல் கல்லுாரி, கே.எம்.மருந்தியல் கல்லுாரி, அலைடு மெடிக்கல் சயின்ஸ் மருந்தியல் கல்லுாரி இணைந்து தேசிய மருந்தியல் வார விழாவை முன்னிட்டு நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
வக்பு வாரிய கல்லுாரியில் தொடங்கிய இப்பேரணி, மதுரை மருத்துவக் கல்லுாரியில் நிறைவுற்றது. மருந்தியல் கல்வி மாணவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் குறித்த வாசக பதாகைகளை தாங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிறைவு விழாவில் டாக்டர்கள் மல்லிகா, வெங்கட ரத்தின குமார், ராம்குமார், சிதம்பரநாதன், சுதா, பார்மா பேப்ரிகன் மருந்து உற்பத்தி நிறுவன பங்குதாரர் பொன்ராஜன் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
