UPDATED : நவ 21, 2026 07:14 PM
ADDED : நவ 21, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார, துாய்மைப்பணியாளர்கள் லஞ்சம் கேட்டால் ‘கியூ.ஆர்.,கோடு’ மூலம் உடனடியாக புகார் தெரிவிக்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ட்ரெச்சர், வீல்சேர் தள்ளுவதற்கும் வார்டுகளை சுத்தம் செய்யும் பணிக்காக மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் லஞ்சம் கேட்டால் சிகிச்சை கிடைக்காதோ என பயந்து யாருக்கும் லஞ்சம் தரவேண்டியதில்லை. உடனடியாக வார்டின் முன்புறம் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள 'கியூ.ஆர். கோட்டை’ அலைபேசியில் படம் பிடித்து தகவல் சொன்னால் போதும். புகார் தெரிவிப்பவரது அடையாளம் வெளிவராது. புகார் பதிவு செய்த உடனே டீன், நிலைய மருத்துவ அலுவலரின் மெயிலில் புகார் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
