ADDED : நவ 05, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சோழவந்தானில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் மலையாளம் கிருஷ்ண அய்யர் பாடசாலையில், மஹாபெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ வைபவம் நடந்தது. மாலை 4:00 மணி முதல் வேத பாராயணம் நடந்தது. பூஜை, தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
முள்ளிப்பள்ளம் கிளையில் மஹாபெரியவருக்கு பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இங்கு தினமும் மாலை 131 மாணவர்கள் இலவச கல்வி பயின்று வருகின்றனர். நாட்டு பசுக்கள் கோசாலையில் பராமரிக்கப்படுகிறது.
ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஸ்ரீகுமார், பாலசுப்பிரமணியன், வரதராஜ பண்டிட், வெங்கட்ராமன், வீர மணிகண்டன் செய்துஇருந்தனர்.

