/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு
/
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு
ADDED : டிச 03, 2025 09:21 AM
மதுரை: 'கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக கோவில் நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்துள்ளது.
மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்' என, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, கோவில் செயல் அலுவலர் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். பதிவுத்துறையின் பரிசீலனைக்கு பின் மனு ஏற்கப்படும் பட்சத்தில், இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்.