நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் கிளை நுாலகம், வாசகர் வட்டம், சாரல் அரிமா சங்கம் சார்பில் தேசிய நுாலக வார விழா, பாராட்டு விழா மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதி தலைமையில் நடந்தது.
அரிமா சங்கத்தலைவர் விஜயபாண்டி முன்னிலை வகித்தார். நுாலகர் மலர்விழி வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் சங்கரன், துணைத் தலைவர்கள் பழனிராஜ், முருகன், ஓய்வு நுாலகர் இளங்கோ பேசினர். பேச்சு, கட்டுரை, கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரிமா சங்க மாவட்ட இணை பொருளாளர் ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார். அதிக புரவலர்களை சேர்த்து தமிழக அரசால் பாராட்டு பெற்ற ராயபாளையம் ஊர்புற நுாலகர் காதர் அமித்தை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. வாசகர் வட்ட பொருளாளர் சக்கையா நன்றி கூறினார்.

