/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொல்லியல்துறை ஆய்வு; அனுமன்சேனா எதிர்ப்பு
/
தொல்லியல்துறை ஆய்வு; அனுமன்சேனா எதிர்ப்பு
ADDED : டிச 12, 2025 07:26 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற பிரச்னையில், நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக தொல்லியல் துறை தீபத்துாணை ஆய்வு செய்தது கண்டனத்திற்குரியது என அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்ததை மதிக்காமல் சிறுபான்மையினர் ஓட்டுக்காக தமிழக அரசு தடுத்து வருகிறது. தீபத்துாணில் தமிழக தொல்லியல் துறையின் ஏழு பேர் அளவீடு செய்து ஆய்வு செய்துள்ளனர். இதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதா. ஆய்வுக்கு செல்லும்போது மனுதாரரையோ அல்லது மாவட்ட நீதிபதி ஒருவரையோ அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னாகவே எதற்காக தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும்.
இதன்மூலம் தீபத்துாணில் உள்ள அடையாளங்களை அழிக்க தமிழக அரசு மாநில தொல்லியல் துறையை பயன்படுத்துவதாக சந்தேகம் எழுகிறது. கடந்த ஏழு நாட்களாக மலை மேல் செல்ல யாருக்கும் போலீசார் அனுமதிக்கவில்லை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கலெக்டரும் இருக்கிறார். அப்படி இருக்கும் சூழ்நிலையில் மலை மீது மாநில தொல்லியல் துறை ஆய்வு செய்வதற்கு கலெக்டர் ஏன் அனுமதிக்க வேண்டும்.
இது ஹிந்துக்களையும், முருக பக்தர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் அளவீடு செய்த மாநில தொல்லியல் துறையினர் மீதும் அதற்கு அனுமதி அளித்த கலெக்டர் மீதும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றார்.

