தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பயணிகளுடன் வாக்குவாதம்

பயணிகளுடன் வாக்குவாதம்

பயணிகளுடன் வாக்குவாதம்


ADDED : ஆக 30, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து அருப்புக்கோட்டைக்கு மாலை 4:40 மணிக்கு தனியார் பஸ் கிளம்பியது. அதில் ஏறிய ஒரு பயணியர் குடும்பம் காரியாபட்டிக்கு செல்ல வேண்டும் என கண்டக்டரிடம் தெரிவித்து விட்டு ஏறி அமர்ந்தது. அவர் சரி என்றதால் சீட்டில் அமர்ந்தனர்.

அதன்பின்னர் அருப்புக் கோட்டைக்கு அதிகளவில் பயணிகள் ஏறியதால், காரியாபட்டி செல்லும் குடும்பம் உட்பட சிலரை பஸ்சில் இருந்து விரட்டுவது போல மிரட்டி இறக்கி விட்டார் கண்டக்டர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பயணிகள், பஸ்ஊழியர்கள் இடையே மோதல் உருவாகும் சூழல் இருந்தது. பஸ்நிறுவனத்தை தொடர்பு கொண்ட பயணிகள் உரிய பதில் கிடைக்காததால் சாபமிட்டு வேறு பஸ்சை தேடிச் சென்றனர். பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘முதலிலேயே தெரிவித்து இருந்தால் ஏறி இருக்க மாட்டோம். ஏறியபின் தகாத வார்த்தை கூறி இறங்கச் சொல்வது எந்த வகை நியாயம். ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us