நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி பகுதியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நடந்தது. மேற்பார்வையாளர் ரவி கணேஷ் தலைமையில் நடந்த விழாவில் குறுவளமைய அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரை, நாட்டு நடனம், தெருக்கூத்து போட்டிகளில் 900 மாணவர்கள் வென்று மாவட்ட போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.