ADDED : நவ 07, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
முகத்தில் பருக்கள் நீங்கி தோல் அழகாக மாற வேண்டும். இதற்கு சித்தா அல்லது ஆயுர்வேத முறையில் வழிகள் உள்ளதா.
– ஷர்மி, திண்டுக்கல்.
இளம் வயதில் இந்த பிரச்னை இருக்கிறது என்றால் ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம்.
பொதுவாக பருக்கள் வராமல் தடுக்க மலச்சிக்கல், தலையில் பொடுகு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தோல் நோய்களுக்காக பரங்கிப்பட்டை மாத்திரை, சங்கு மாத்திரைகள் உள்ளன. திரிபலா சூரணம் கொண்டு முகத்தைத் கழுவலாம். ஹார்மோன் பிரச்னையால் பருக்கள் ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையை டாக்டரை அணுகியே எடுக்க வேண்டும்.
– டாக்டர் பேச்சி, உதவி சித்த மருத்துவ அலுவலர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திண்டுக்கல்.
