நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில் கிழக்கு வட்டார வளமையத்தில்மாற்றுத்திறன் மாணவர்களுக்குமருத்துவ மதிப்பீட்டு முகாம் உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.தலைமையாசிரியர் சசித்ரா,வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்தர்ராணி, ஜான்சி முன்னிலை வகித்தனர்.
95 மாற்றுத்திறன் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மஞ்சுளா, உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் நாகலட்சுமி,ஆசிரியர் பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் பங்கேற்றனர். சிறப்பு பயிற்றுநர் ரேணுகா நன்றி கூறினார்.

