ADDED : ஏப் 07, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : சேடபட்டி ஒன்றியம் அத்திபட்டி - சாப்டூர் சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பிடம் கட்டப்பட்டது. மின்சார இணைப்பு, பராமரிப்பு இன்றி முட்புதர் மண்டி பூட்டப்பட்டுள்ளது.
அப்பகுதி பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால் கட்டுமானம் சிதிலம் அடையும் நிலையில் உள்ளது. சேடப்பட்டி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.