/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சி
/
பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சி
ADDED : மார் 06, 2024 05:58 AM
எழுமலை : உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் ரவி. எழுமலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலை உத்தப்புரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு ஓட்டலுக்குச் சென்று விட்டார். காலை 11:00 மணிக்கு உத்தப்புரம் குழந்தைவேலு 30, இ.கோட்டைப்பட்டி கர்ணமகாராஜா 30, அம்மாபட்டி பிரதாப் 26, ஆகியோர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சித்தனர்.
எதிர் வீட்டில் இருந்த பொன்னுத்தாய் 70, வீட்டிற்குள் இருந்தவர்களிடம், நீங்கள் யார், என்ன விவரம் எனக் கேட்டு சத்தம் போட்டார். வெளியே வந்த அந்த கும்பல், அவரை தாக்கிவிட்டு தப்பியது. உசிலம்பட்டி டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் உத்தப்புரம் பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் கைது செய்தனர். காயமடைந்த மூதாட்டியை சிகிச்சைக்கு அனுப்பினர். உத்தப்புரத்தில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

