ADDED : ஜன 22, 2025 08:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டேனியல் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் மகாலிங்கம், இணைச் செயலாளர் சந்திரன், சிவகங்கை செயலாளர் சங்கரசுப்ரமணியன் உட்பட பலர் பேசினர். முன்னாள் தலைவர் நடராஜன் நிறைவுரையாற்றினார்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளை தாண்டியும் தேர்தல் வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
விரைவில் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என பேசினர்.