/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிப்பர் லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி: 6 பேர் காயம்
/
டிப்பர் லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி: 6 பேர் காயம்
ADDED : செப் 27, 2024 07:07 AM

உசிலம்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருந்து டிப்பர் லாரியில்எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு டிரைவர் நாகேந்திரன் 39, உசிலம்பட்டிக்கு ஓட்டி வந்தார். காலை 8:40 மணியளவில், செட்டியபட்டி வழியாக வந்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரம் நின்றிருந்த 2 ஆட்டோக்கள், டூவீலர்கள் மீது மோதி சிவா என்பவரது வீட்டின் முன்பகுதியில் மோதி நின்றது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் விமல்ராஜா 45, பலியானார். ஆட்டோவின் அருகில் நின்றிருந்த தவராஜா, அவரது மகள் ஜெசிகா, மலைராமன், அறிவழகன், மலைராஜா காயமுற்றனர். லாரியின் அடியில் சிக்கிய மாற்றுத்திறனாளி விஜயகுமாரை 46, போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் இணைந்து டிப்பர் லாரியில் இருந்த மணலை அகற்றி ஒரு மணிநேரமாக போராடி லாரியை துாக்கி மீட்டனர்.
உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

