ADDED : அக் 28, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
தாலுகா அலுவலகத்திற்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனருகே சார்நிலை கருவூலம், ஸ்டேட் பாங்க், கால்நடை மருத்துவமனை உள்ளது. நிழற்குடை இல்லாததால் வெயிலிலும் மழையிலும் பயணிகள் நிற்க சிரமப்படுகின்றனர். நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி அலைகின்றனர்.
இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து வத்ராப், விருதுநகர், எஸ்.மேலப்பட்டி, கூவலப்புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பயணிகள் கால் கடுக்க வெயிலில் காத்து இருக்கின்றனர். குழந்தைகளுடன் காத்திருப்போர் நிலை பரிதாபமாக உள்ளது.
பொது மக்களின் நலன் கருதி நிழற்குடைகள் அமைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.