ADDED : ஜூன் 30, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ரோட்ராக்ட் அமைப்பின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட பிரதிநிதி சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட சேர்மன் ஞானகுகன், நிகழ்ச்சி தலைவர் ருத்சைலா, செயலாளர் அஜய் முன்னிலை வகித்தனர். கல்லூரிச் செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா பேசினர்.
2024-- 25ம் ஆண்டு மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலுார் கல்லுாரிகளில் உள்ள ரோட்ராக்ட், கம்யூனிட்டி கிளப் மாணவர்களில் சிறந்த சேவையாற்றிய 300 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் ரஞ்ஜித் குமார் நன்றி கூறினார். நிர்வாகிகள் சுல்தான், விக்னேஸ்வரன், கவுசல்யாதேவி ஏற்பாடுகள் செய்தனர்.