ADDED : மார் 17, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பூமி அறக்கட்டளை, இந்திய வானிலை ஆய்வுத்துறை, கன்னிவாடி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம், வேளாண் வானிலை ஆலோசனை சேவைகள் குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் வெள்ளைமலைப்பட்டியில் நடந்தது.
அறக்கட்டளை இயக்குநர் தர்மநீதி வரவேற்றார். நடுப்பட்டி ஊராட்சித் தலைவர் அபிமன்னன், துணைத் தலைவர் செல்வி, விவசாய சங்க தலைவர் பின்னியப்பன், தங்கலாச்சேரி தமிழ்க்காடு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் பங்கேற்றனர்.

