UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 05:45 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி:
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி சம வாய்ப்பு பிரிவு சார்பில் அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான சமூகத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெயஷீலா வரவேற்றார். அருளானந்தர் கல்லுாரி பேராசிரியர் ஜேம்ஸ் வசந்த் பேசினார். பேராசிரியை வித்யா நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
