ADDED : ஜூலை 31, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா உத்தரவுபடி போக்குவரத்து போலீசார் பள்ளி சந்திப்புகள், பஸ் ஸ்டாப், டிராபிக் சிக்னல்களில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திலகர் திடல் இன்ஸ்பெக்டர் தங்கமணி சிம்மக்கல் பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவர்களுக்கு படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள், போதைப்பொருள் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாதுகாப்பான பயணத்திற்கான உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.