ADDED : மார் 14, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் தலைமையில் நடந்தது.
உதவித் தலைமையாசிரியர் ஜான்கென்னடி, அருட்தந்தை செல்வமணி முன்னிலை வகித்தனர். ஆசிரியை சாந்தி வரவேற்றார். தலைமையாசிரியர் சூசைமாணிக்கம் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு, கலைநிகழ்ச்சிகள், கோஷங்களுடன் ஊர்வலம் நடத்தினர். ஆசிரியர் அருள்ஜோசப் உறுதி மொழியை வாசித்தார்.

